"விஸ்வரூப தரிசனம்"
"விஸ்வரூப தரிசனம்" - ஓர் ஆன்மீக புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டது.
மார்கழி மாதம் ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு ஒரு 25 பேர் காத்திருந்தனர், அவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். விஸ்வரூப தரிசனம் என்றால், அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது, இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. ‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.
பார்வையற்ற இவர்களால் விஸ்வரூப தரிசனம் பார்க்க முடியாதே...! இதன் தாத்பரியம் என்னவோ?
சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால், இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம்.
காலை திரை விலக்கப்பட்டதும், இறைவன் பார்ப்பார், அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும், அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு.
இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும், பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும், இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்றார்.
எப்பேர்ப்பட்ட தத்துவம் - எப்பேர்ப்பட்ட உண்மை….!
காலஙகாலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால், பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள். ஓம் நமோ நாராயணா
Spiritual Information shared by Thiruvannamalai Tour.
What's app : 9843827908.
Comments
Post a Comment