வீரவன்னிய மகாராஜா நெருப்பில் தோன்றிய வரலாறு...

 திருவண்ணாமலை மாவட்டம்,,தமிழ்நாடு மாநிலம், இந்தியா


செங்கம் வட்டம், பெரியபாலியப்பட்டு -கிராமம், ஸ்ரீ துரோபதி அம்மன் ஆலயத்தில் 75 வது வருடம் வீர வன்னிய நாடக விழா அழைப்பிதழ்...


நிகழ்ச்சி நிரல் : 14-07-2021 - வாதாபி திக்கு விஜயம்-வாதாபி  பிறப்பு.

 

               : 15-07-2021-வீர வன்னிய மகாராஜா பிறப்பும்,நெருப்பில் இருந்து வன்னிய மகாராஜா பிறப்பும், திருமணமும்.


               : 16-07-2021 அசுரன் வாதாபி சூரசம்ஹாரம்.-வன்னிய மஹாராஜாவால் வாதாபி கொல்லப்படும் நிகழ்ச்சி.


அன்னதான உபயம் :அருணாச்சல அத்யாதம ஆசிரமம்,ஆணைபிறந்தான்.


வீரவன்னிய மகாராஜா நெருப்பில் தோன்றிய வரலாறு...


இந்து மதம் 18 புராணங்களை உள்ளடக்கியது. இதில் 9 - வது புராணம் வீரவன்னிய புராணம்.

வாதாபி என்ற அசுரனை அழிக்க சம்பு மகரிஷி முனிவரை யாகம் செய்ய சொல்லி.அந்த அக்னி குண்டத்தில் வன்னி குச்சியை போட்டு நெருப்பை உண்டாக்கி சிவபெருமானும் பார்வதி தேவியும் இணைந்து நின்று தனது நெற்றி கண்ணில் இருந்து ஆகுதி நீரை தாமரை இலையில் எடுத்து  அக்னி குண்டத்தில் போட ,அந்த அக்னி குண்டத்தில் இருந்து வீரவாளோடு வெள்ளை குதிரையில் தோண்றியவன்தான் வீரவன்னிய மகாராஜா .

அவன் வழி வந்தவர்கள்தான் இந்த வீர வன்னியர் கூட்டம்.சிவபெருமான் சொல்கிறார் சம்புமாமுனிவர் யாகத்தில் உருவனதால் உனது கோத்திரம் சம்புமகரிஷி கோத்திரம்.வன்னிகுச்சி நெருப்பில் நீ உருவனதால் நீ வீரவன்னிய என்று அழைக்கப்படுவாய்.

சிவபெருமானும் பார்வதியும் நமக்கு தாயும்,தந்தையும் ஆவர். முருகனும் விநாயகரும் உனக்கு சகோதரர்கள்.விஷ்ணு நமக்கு மைத்துனர்.

வீரவன்னியனுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள் .

தேவேந்திரனின் இளைய மகள் மந்திரமாலையை திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பிறந்தவன்தான் வீரவன்னியாகுல சத்திரியன்.

சத்திரியன் என்றால் அரசகுலத்தவன்.இந்த நாட்டை ஆண்டவன்.

அசுரர் குலம் அழிந்தபோது சூரனின் தங்கை அஜமுகி துருவாசக முனிவரோடு இணைந்து வாதாபி,வில்லவன் வாதாபி என்ற இரண்டு குழந்தையை பெற்றெடுத்தாள் .

வில்லவனை அகத்திய முனிவர் அழிக்கிறார்.

வாதாபியை வீரவன்னிய மகாராஜா அழிக்கிறார்.

நெருப்பில் இருந்து வன்னிய மகாராஜா பிறப்பதை தெருக்கூத்து நாடகம் நடத்தி இனத்தின் வரலாற்றை தனது மக்களுக்கும் உலகிற்கும் தெரிப்படுத்துகிறார்கள்...



Information Shared by Thiruvannamalai Tour...


Email : baranisouravraga

@gmail.com.


What's app : 9843827908.





Comments