வாதாபி பிறப்பு ,வரலாறும் அவனது அழிவும்.....

 வாதாபி பிறப்பு ,வரலாறும் அவனது அழிவும்.....


ஒளிமயமான கயிலாய மலையிலிருந்து "மின்னல் போல வந்த மாயா" என்ற பெண்ணுக்கும், கடுந்தவம் செய்து வந்த ஒரு" ரிஷிக்கு சூரபத்மன், கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன்" என்ற மூன்று ஆண் மக்களும்," கஜமுகி" என்ற பெண்ணும் பிறந்தனர்.


இந்த மூன்று ஆண் அசுரர்களும் முருகப் பெருமானால் அழிக்கப்பட்டனர்.கஜமுகி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் தங்கை ஆவாள். 



கஜமுகி துர்வாச முனிவருடன் கூடி வில்வலன் எனும் மஹி மற்றும் வாதாபிஎன்ற பலசாலியான இரு அரக்கர்களைப் பெற்றெடுத்தாள். இவ்விரு அரக்கர்களும் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப் படுத்தினார்கள்.


மஹியும்{வில்வலன்} வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தனர். இதனால் கோபம் அடைந்த அகத்தியர் வில்வலன் மஹியைஅழித்து விட்டார்.


தம்பியை இழந்த வாதாபி கடும் கோபம் அடைந்தான். தனிமையில் சிவனை நோக்கித் தவம் செய்து அளப்பரிய வரங்கள் பெற்றான். அந்த வலிமையின் மூலம், தெற்கு கடற்கரையின் மையப் பகுதியில் அமைந்திருந்த ரத்னபுரியை அரசாள ஆரம்பித்தான்.


பின்னர் மயனின் மகளான சொக்க கன்னியை மனந்தான்.வாதாபி மனைவி சொக்கக் கன்னி கம்பன், கஜமுகன், கும்பன், சம்புமால் என்று நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். வாதபி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியர் துணை இருந்தார்.




வாதாபி அனைத்து உயிரினங்களுக்கும், தேவர்களுக்கும் பெரும் துன்பம் விளைவித்தான். தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவன் உடனடியாக பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவரையும் அழைத்து ஆலோசித்தார்.


அப்போது விஷ்ணுபகவான் சிவபெருமனைப் பார்த்து சம்புமாமுனிவர் வடக்குத் திசையில் தவம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை அழைத்து அவருடைய யாகத்தீயில் உமது நெற்றி கண்ணிலிருந்து செந்நீர் பொழிந்து ஒரு வீரமனிதனை உருவாக்கி, அந்நாயகன் மூலமே வாதாபி சூரனை அழிக்க முடியும் என்று சூசகமாகக் கூறினார்.


சிவனின் ஆசையுடனும்,

காமாட்சி அம்மன் வழிகாட்டலுடன் வீர வன்னியனால் அரக்கன் வாதாபி கொல்லப்படுகிறான்.



Information Shared By Thiruvannamalai Tour...



Whats app : 9843827908.



Email : baranisouravraga@gmail.com.





















Comments