நிருதி லிங்கம் சிறப்பு...
நிருதி லிங்கம் சிறப்பு
பிரம்ம லோகத்தில் பிரம்ம தேவனால் சாபம் பெற்ற அஷ்ட திக்கு பாலகர்கள் தன்னுடைய சாப நிவர்த்தி பெற அண்ணாமலையார் மலையை சுற்றி எட்டு திசையிலும் எட்டு சிவ லிங்கத்தை நிறுவி அதனை வழிபட்டார்கள்.
அஷ்ட திக்கு பாலகர்கள் :
இந்திரன் , அக்னி ,எமன், நிருதி ,வருணன் , வாயு , குபேரன்,ஈசானன் என்று எட்டு பேரு ஆவார்கள்.தங்கள் சாபம் நிவர்த்தி பெற திருவண்ணாமலை தலத்தில் அஷ்டதிக்குகளில் , அவரவர் தம்முடைய பகுதிலயில் அமர்ந்து மலையை நோக்கி கடும் தவம் புரிவார்கள்..இவர்களின் கடும் தவத்தின் பயனால் இந்த அண்ணாமலையார் மலை இவர்களுக்கு எட்டு முகமாக காட்சி கொடுத்தது. இவர்களின் சாபத்தை நிவர்த்தி செய்தது..சோண தீர்த்தத்துக்கு அருகே நிருதி லிங்கம் அமைந்துள்ளது..
ஹரியை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.அப்போது கிரிவல மலையின் தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அந்த இடத்தைநோக்கி நிருதீஸ்வரர் சென்றார்.
அவர் எதிரில் பிரதிரூப லிங்கம் தோன்றியது. அதுதான் நிருதிலிங்கம். இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு கிடைக்கும்.
Information Shared By Thiruvannamalai Tour...
whats app : 9843827908.
Email : baranisouravraga@gmail.com.
Comments
Post a Comment