இயற்க்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் விவசாய நிலங்கள் இடையே பாயும் செய்யாறு நதி....

 



இயற்க்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் விவசாய நிலங்கள் இடையே பாயும் செய்யாறு நதி....



திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள் காமாட்சி அம்மன், சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென்கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே "சேயாறு", இதுவே தற்போது "செய்யாறு" என்று அழைக்கப்படுகிறது.




திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை பகுதியில் உருவாகும் இந்த ஆறு, பாலாறு நதியின் துணை ஆறு ஆகும்.




ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி, மேற்குத் தெற்காகப் பாய்ந்து, பின்பு செங்கம் அருகில், வடகிழக்காகத் திரும்பி, திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது.




திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். 



ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீமன் ஆறு, மிருகண்ட நதி அணையிலிருந்து  வரும் துணை ஆறு, சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன.




செண்பகத்தோப்பு அணையிலிருந்து உருவாகும் கமண்டல நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் நாகநதி ஆறும், ஆரணி அருகே உள்ள சம்புவயாயநல்லூர் கிராமத்தில் ஒன்று இணைந்து, ஆரணி நகரின் வழியாக சென்று வாழைப்பந்தல் எனுமிடத்தில் செய்யாற்றுடன் இணைகிறது.




காஞ்சிபுரம் நகரை அடுத்த பழையசீவரம் எனும் ஊரில் பாலாறு நதிடன் இணைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.













Information Shared by Thiruvannamalai Tour ...



What's app: +91 9843827908.



Email: baranisouravraga
@gmail.com.

Comments