மஹாபாரதத்தில் வரும் குந்தி தேவிக்கும் துர்வாசகருக்கும் கோயில் அமைந்துள்ள கிரிவல பாதை...
மஹாபாரதத்தில் வரும் குந்தி தேவிக்கும் துர்வாசகருக்கும் கோயில் அமைந்துள்ள கிரிவல பாதை...
வாசு தேவருக்கும் தேவகிக்கும் பிறந்த எட்டாவது குழந்தை பகவான் கிருஷ்ணர் ஆவார்.
வசுதேவரின் உடன் பிறந்தவளான குந்தி, பாண்டு மன்னனின் மனைவி ஆவார்.
அவளது பெயர் ப்ரித்தா யாதவ குலத்தின் வம்சமும் சூரசேனா என்ற ஊரின் அரசனின் மகளும் ஆவார்.
ப்ரித்தாவின் இன்னொரு பெயர் குந்தி தேவி. சுரசேனாவிற்கு பிறந்திருந்தாலும் குந்தி தேவி இளவயதிலேயே உறவினரான குந்திபோஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டார். இவர் குந்தி அரசாங்கத்தின் மகாராஜா. தத்து கொடுக்கப்பட்ட பிறகே ப்ரித்தா என்ற பெயரை குந்தி தேவி என்று மாற்றப்பட்டது.
தனக்கு குழந்தை இல்லாத குறையை தீர்க்க குந்தி தேவியை தன்னுடன் வைத்து வளர்த்து அந்த ஏக்கத்தை தீர்த்துக் கொண்டார்.
இவ்வாறு குந்திபோஜா அரசரின் அரவணைப்பில் ஒரு ராணிக்குரிய அனைத்து அம்சங்களும் பெற்றவளாய் வளர்கிறாள் குந்திதேவி. ஒருநாள் துருவாச முனிவர் குந்திபோஜாவின் அரண்மனையில் வந்து சில காலம் தங்க நேரிடுகிறது. அப்போது குந்தி போஜாவை நாடி தன்னுடைய நிலைமையை விளக்குகிறார். துர்வாச முனிவரின் நிலையை புரிந்துகொண்ட குந்திபோஜா, அவருக்கு பணிவிடை செய்வதற்கு தன்னுடைய பணிப்பெண்களின் மேல் நம்பிக்கையில்லாமல் தன்னுடைய சொந்த மகளான குந்திதேவியை பணிவிடை செய்ய அனுப்புகிறார்
துர்வாச முனிவருடன் தங்கி அவருடைய தேவைகளை பூர்த்தி செய்தும், அவரை தன்னுடைய சேவைகளால் மகிழ்வித்தும் வந்தார் குந்திதேவி. குந்திதேவியின் பொறுமையை சோதிக்க பல்வேறு சோதனைகளை ஏற்படுத்தினார் துர்வாச முனிவர். எனினும் முனிவர் மீது சிறிதும் கோபம் கொள்ளாமல் அனைத்து சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு துர்வாச முனிவரை மகிழ்வித்தார் குந்தி. இவ்வாறு சிறிது காலம் செல்ல, குந்தி தேவியின் அர்பணிப்பால் மகிழ்ந்த துர்வாச முனிவர் குந்தி தேவிக்கு ஒரு அரிய வரத்தை அளிக்கிறார்.
அதாவது "கன்னித்தன்மையை இழக்காமல் எந்த தேவரை நினைத்து குந்தி வழிபடுகிறாளோ, அந்த தேவரின் மூலம் அவருக்கு ஒரு குழந்தை கிடைக்கும்" என்பது வரமாகும்.
குந்திக்கு விளையாட்டு புத்தி, முனிவர் அங்கிருந்து நகர்ந்ததும் எப்படி குழந்தை பிறக்கும், ஒரு மந்திரம் சொன்னால் என்று சிரித்துக் கொண்டே யோசிக்கிறார். வெயில் சுட்டெரிக்க இயல்புக்கு திரும்பியவருக்கு திடீரென்று ஒரு எண்ணம், வானத்தில் மேலே நின்று கொண்டிருந்த சூரியனைப் பார்த்து முனிவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை உச்சரிக்கத் துவங்கிவிட்டார். என்ன ஆச்சரியம். அழகான கவச குண்டலத்துடன் கூடிய ஒரு. ஆண் குழந்தை கிடைத்துவிட்டது.அந்த ஆண் குழந்தைதான் கர்ணன்.
உடனே குந்தி தேவி தன்னுடைய தவறை உணர்ந்து நான் இப்போது கல்யாணம் கூட ஆகாத கன்னிப்பெண். இந்த குழந்தையை தற்போது என்னால் வளக்க முடியாது என்றும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சூரிய தேவனிடம் மன்றாடுகிறாள்.
திருமணத்திற்கு முன்னால் பிறந்த இந்த குழந்தையை என்ன செய்ய? அப்பா.... மற்றும் பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். மந்திரம் சொன்னால் குழந்தை பிறக்கும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?
பயங்கொண்ட குந்தி, அந்த குழந்தையை அழகிய வேலைப்பாடுடைய கூடையில் வைத்து, ஆற்றில் மிதக்கவிடுகிறார். அதனை கொல்ல மனமில்லாமல் கண்காணாத இடத்திற்குச் சென்றுவிடட்டும் என்று அனுப்பிவிடுகிறார்.
Information Shared by Thiruvannamalai Tour ...
What's app: +91 9843827908.
Email: baranisouravraga
@gmail.com.
Comments
Post a Comment