முருகன் அருணகிரியாருக்கு காட்சி அளித்த கம்பத்து இளையனார் சந்நிதி -திருவண்ணாமலை.

 


அற்புதங்கள் நிறைந்த அண்ணாமலையார் கோயில் 
முருகன் அருணகிரியாருக்கு காட்சி அளித்த கம்பத்து இளையனார் சந்நிதி -திருவண்ணாமலை.


திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு தூணில் காட்சியளித்த முருகப்பெருமான்




பொதுவாக ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபடுவோம். அதற்கேற்ப ஆலயங்களில் விநாயகர் சன்னதி முதலில் அமைக்கப்பட்டு இருக்கும்.


ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அப்படி அல்ல. முதல் சன்னதியாக தமிழ் கடவுள் முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் விநாயகர் இடம் பெற்றிருந்தாலும் சன்னதி என்ற கணக்கில் வரும்போது திருவண்ணாமலை ஆலயத்தில் நம்மை வரவேற்பது முருகப்பெருமான்தான்.


அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார்.


இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது.


சம்பந்தாண்டான் என்ற தேவி உபாசகருக்கும், அருணகிரி நாதருக்கு ஒருமுறை போட்டி நடந்தது.


யார் தமது கடவுளை எல்லோரின் முன்னிலையில் நிறுத்துகின்றாரோ அவரே சிறந்தவர் என்பதுதான் அந்த போட்டி. முதலில் சம்பந்தாண்டான் தான் வழிபடும் காளியை அழைத்தார். ஆனால் காளி வரவில்லை. 


இதையடுத்து அருணகிரிநாதர் முருகப்பெருமானை வேண்டினார். “மயிலும்பாடி நீயாடி வர வேணும்” என்ற திருப்புகழ் பாடலை மனம்உருக பாடினார். 


அருணகிரிநாதரின் முழுமையான அர்ப்பணிப்பு பக்தியால் அங்கிருந்த மண்டபத்து தூண் வெடித்தது. அந்த தூணில் இருந்து முருகப்பெருமான் மயிலோடு வந்து காட்சி அளித்தார். இதை கண்டு அனைவரும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அருணகிரி நாதருக்காக முருகப்பெருமான் 2வது முறையாக மீண்டும் தோன்றி காட்சி அளித்ததால் முருகன் பாதம் பட்ட இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  












முருகன் தூணில் இருந்து தோன்றும் காட்சியும் அந்த மண்டபத்து தூணில் காட்சி அளிக்கிறது. அந்த மண்டபம் கொண்ட முருகன் சன்னதி கம்பத்து இளையனார் சன்னதி என்று அழைக்கப்படுகிறது. கம்பத்தில் இருந்து முருகன் தோன்றியதால் கம்பத்து இளையனார் என்ற பெயர் பெற்றுள்ளது.




Information Shared by Thiruvannamalai Tour ...


What's app: +91 9843827908.



Email: baranisouravraga
@gmail.com.

Comments